தற்போது வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தினை 3 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, சமுர்த்தி பிளஸ் திட்டத்தின் கீழ், அந்த மக்கள் பல்வேறு தொழில்களில் பணியாற்ற உள்ளனர்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களிடம் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் குறிப்பிட்டார்.