செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை“அவசரகால சட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

“அவசரகால சட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Published on

spot_img
spot_img

அவசரகால சட்டம் மீண்டும் பிரகடனப்படுத்தபட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அத்தோடு அரசாங்கம் மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சியினையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்தார்.

மக்கள் முழுமையாக அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கின்ற வேளையில் தமக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Latest articles

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைப்பு….

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி...

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு….

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித்...

தற்காலிகமாக மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்….

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும்...

More like this