கல்முனையில் உள்ள நபர் ஒருவரிடம் அரசு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி வங்கி மூலம் பணம் பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் கல்முனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒன்பதாம் திகதி அன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டு வங்கி கணக்குகள் ஊடாக 702000 ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இது குறித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பணம் அனுப்பி வைக்கப்பட்ட வங்கி விபரங்களை அடிப்படையாக கொண்டு குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.