தலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து ஐஸ் போதைப்பொருள் பேசாலை போலிசார் மீட்டுள்ளனர்.
தலை மன்னாரில் இருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்து பேருந்தை இரவு 8 மணியளவில் பேசாலை போலீஸ் நிலையத்திற்கு முன்பாக பேசாலை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி H. N. K. Kerath உதவி போலீஸ் பரிசோதகர் A. S. Aananth ஆகியோர் அடங்கிய குழு சோதனையிட்டது. இதன் போது பேருந்தின் பின் ஆசன இருக்கையின் கீழ் காணப்பட்ட பொதியொன்று மீட்கபட்டது. அதன் 95g நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கபட்டது. பின் இருக்கையில் இருந்தபயணி பேருந்து சாரதி நடத்துனர் ஆகியோர் பேசாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீண்ட நேர விசாரணயின் பின் விடுவிக்கப்படனர். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌவ்கரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.