குவைத் நாட்டில் பணிபுரியும் அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசங்கம் சலுகை வழங்கியுள்ளது.அதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை தொடங்கிக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணிக்குள் எந்த நேரத்திலும் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் எனவும், கட்டாயமாக 7 மணி நேரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ” ஊழியர்கள் தாம் விரும்பும் நேரத்தில் தமது வேலையை ஆரம்பிப்பதால் உற்சாகத்துடன் பணிபுரிகின்றனர் என குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குவைத் அரச ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.