வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதீட்டில் கல்விக்கான எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை.அத்துடன், பல்கலைக்கழகங்களை தனியாருக்கு வழங்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.