கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவரும் விபச்சார நிலையமொன்றை பலமான அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர் சுற்றிவளைத்து அங்குள்ள இரண்டு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி பிரதேசத்தில் உள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அந்த நபர் கண்டி பொலிஸ் எல்லைக்கு வெளியிலும் இவ்வாறான பல விபச்சார நிலையங்களை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.