அம்பாறை மாயாதுன்ன பகுதியில் 15 வயது குழந்தையொன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற 12 போர் துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு வீட்டின் பின்புறமுள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் குழந்தை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
பின்னர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.