மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது எனவும், சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு பிரேரணையை முன்வைக்க அமைச்சரவை தயாராகி வருவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (1) தெரிவித்தார். ‘பொது கொள்கை திட்டங்களின்’ கீழ் மின் கட்டண உயர்வு.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் சட்டத்தில் தனித்தனியாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திரு.ரத்நாயக்க, மின்சார சபையிடமிருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கிடைத்தால் மாத்திரமே அதனை முன்னெடுப்பதாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த திரு.ரத்நாயக்க, எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (1) விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்திய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.