அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தமையால் குறித்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்து ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறினர்.