அமெரிக்காவின் வின்கான்சின் மாநிலத்தில் உள்ள ஓஷ்கோஸ் நகரில் விமான விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்நகரில் பரிசோதனை விமான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டின் நேற்றைய நாள்(29) நிகழ்வுகளின் போதே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்நிகழ்வுகளின் போது, ரோட்டார்வே 162எப் ஹெலிகாப்டரும், இஎல்ஏ எக்லிப்ஸ் 10 கைரோகாப்டரும் தரையிறங்கும்போது நடுவானில் மோதிக்கொண்டன.இதில், 2 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல் ஓஷ்கோஷ் அருகே வின்னபாகோ ஏரியில் ஒரு சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.