வாகனங்கள் அல்லாத, தற்காலிகமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 299 பொருட்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இறக்குமதிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பொருளாதாரத்தை மேலும் விரிவு படுத்துவதற்காக இந்த இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்தியதாக தெரிவித்தார்.
அதனைத் தவிர இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் போது மீள் ஏற்றுமதி மற்றும் கைத்தொழில் ஏற்றுமதிப் பொருட்களில் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.