அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.
இப்பலோகம, மஹஇலுப்பள்ளம பகுதியில் காரும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.அதன்படி இச் சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெக்கிரவ நடுநிலைப் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் புஸ்பிக கசுந்த சமரதுங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தகவல் தொழிநுட்ப பாடம் தொடர்பான பயிற்சி வகுப்பை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் விபத்திற்கு முகங்கொடுத்துள்ளர்.
இந்த விபத்தானது மாணவனின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. எதிரே வந்த கார் மாணவன் மீது மோதிய நிலையில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் சைக்கிளும் காரும் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.