வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபர் தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் (06.03.2023) அதிகாலை 5.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்திலிருந்தாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி சென்றுள்ளனர்.ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.