03 நாட்களுக்குள் அமெ.டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.இலங்கையின் ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக கடந்த சில நாட்களாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விரைவாக குறைந்து வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்னர் சந்தையில் சீனி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 220 ரூபாவாக இருந்ததோடு இன்று அது 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 340 விலிருந்து 325 வரை குறைவடைந்துள்ளது. 115 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயம் ஒரு கிலோ இன்று 95 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைவடைந்துள்ளது. நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாண் தற்போது, 160, 170 மற்றும் 180 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.அதேபோன்றுநேற்று (8) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.