அதிபர் சேவையின் தரம் III பதவிகளுக்கான நியமனங்களை சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் செய்துகொண்ட உடன்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய பதவிகளுக்கு 4,718 நியமனங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் உச்சநீதிமன்றத்தில் எட்டப்பட்டுள்ளது.
அதிபர் சேவையில் தரம் III பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சில அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.