நாட்டில் நாளாந்தம் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றுக்குள்ளானோர் பதிவாகியுள்ளதுடன், 38,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும், இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை 83,065 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் 65 டெங்கு அபாய வலயங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.