Homeஇலங்கைஅதிகரிக்கப்படுகிறது நீர் கட்டணம்! வெளியானது அறிவிப்பு

அதிகரிக்கப்படுகிறது நீர் கட்டணம்! வெளியானது அறிவிப்பு

Published on

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ கூறுகையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

என்ற போதும், நீர் கட்டண அதிகரிப்பு வீதம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வணக்கத்தலங்கள் மற்றும் பொது நீர் விநியோகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் பொது மக்கள் தங்களது மாதாந்த நீர்க் கட்டணத்தை எதிர்வரும் நாட்களில் நீர்மானி வாசிப்பாளரிடம் பணப்பரிமாற்ற அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்தி செலுத்துவதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வீடுகளுக்கு மாதாந்தம் வருகை தரும் நீர்மானி வாசிப்பாளரிடம் நீர்க் கட்டணத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவே அட்டைகளை பயன்படுத்தி செலுத்தும் வசதிகளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, பொது மக்களின் சிரமங்களை தவிர்த்து கட்டணத்தை இலகுவாக செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest articles

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

More like this