செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஅட்டாளைச்சேனையில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்!

அட்டாளைச்சேனையில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்!

Published on

spot_img
spot_img

பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 .30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடும் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர் உட்பட் 11 பொலிஸார், பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest articles

24 மணி நேரத்திற்குள் மிக்பெரிய சாதனையை படைத்த GOAT பட பாடல்….

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்....

 இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடையை நீக்க தீர்மானித்துள்ள இந்தியா …..

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்...

ஆனைக்கோட்டை பகுதியில் ஆசிரியை உயிரிழப்பு .!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்பனா கோவிந்தசாமி என்னும் 38 வயதுடைய ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட...

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்….

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை...

More like this