ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த தேர்தலிலும் தமது கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று (15) கட்சியின் இரண்டாவது பொது மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு திரு.பசில் ராஜபக்ஷ முதன்முதலில் ஆலோசனை வழங்கிய சந்தர்ப்பம் தனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. புதிய கட்சியொன்றை அமைப்பதே பெரிய பணி என்பதாலும், முன்னாள் கட்சியுடனான தனது உறவின் காரணமாகவும், புதிய கட்சியை உருவாக்க தாம் அப்போது விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் நடவடிக்கைகளை தொடர்வதில் சிக்கல் நிலை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாளை மாபெரும் புரட்சியை செய்யும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.