எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
தனக்கு எதிராக நடக்கும் சதிகளுக்கு அஞ்சப்போவதில்லை என்று கூறிய அவர், தான் எதற்கும் பின்வாங்கும் ஆள் இல்லை என்றும் கூறினார்.
“நான் எதற்கும் பின்வாங்க மாட்டேன். நான் எந்த சதிகளுக்கும் பயப்படவில்லை. நான் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிறேன். அவருக்கு எதிராக எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.