அங்குருவத்தோட்ட, உடுவர பிரதேசத்தில் 87 வயதுடைய பெண் ஒருவரால் நடத்தப்படும் சூதாட்ட விடுதியொன்றை அங்குருவத்தோட்ட பொலிஸார் சுற்றிவளைத்து பெண் உட்பட நால்வரைக் கைதுசெய்துள்ளனர்.
உடுவர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பலர் ஒன்று கூடி சந்தேகத்திற்கிடமான காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், அவர்கள் பந்தயம் கட்டுவதற்காக கொண்டு வந்த 24000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட விடுதியை நடத்தி வந்த வயோதிபப் பெண், இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணும் நான்கு சந்தேக நபர்களும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.